குரு சுக்கிரன் சூரியன் புதன் நாடி ஜோதிட கிரகச் சேர்கைப் பலன்கள் 5

Tuesday, January 30, 2018

குரு அ சுக்கிரன் = சூரியன் புதன் கிரகச் சேர்கை மற்றும் நாடி ஜோதிட கோட்சார பெயர்ச்சி கிரகங்களின் ( குரு அ சனி ) பலன்கள்  

ஜோதிட வகுப்பு பாடங்கள் பதிவு 5 

சென்ற பதிவின் தொடர்ச்சி

பிருகு நாடி ஜோதிடம்
நாடி ஜோதிட வகுப்பு பதிவு 5

தலைப்பு
குரு = சூரியன் + புதன் கிரக சேர்கைப் பலன்கள்
சுக்கிரன் = சூரியன் + புதன் கிரக சேர்கைப் பலன்கள்

ஆய்வு காரகத்துவம்
ஜாதகர் பொது குணாதிசயங்கள்
ஜாதகி பொது குணாதிசயங்கள்

குரு + சூரியன் + புதன் கிரக சேர்கை காரகத்துவப் பலன்கள்
ஜாதகர் புத்திசாலி வேகம் தைரியம் போன்ற செயல்பாடு திறன்களை  தன்னகத்தே தனித்தன்மையான  குணங்களாக  கொண்ட கௌரவமான நபர்.

சுக்கிரன் + சூரியன் + புதன் கிரக சேர்கை காரகத்துவப் பலன்கள்
ஜாதகி புத்திசாலி வேகம் தைரியம் போன்ற செயல்பாடு திறன்களை  தன்னகத்தே தனித்தன்மையான  குணங்களாக  கொண்ட கௌரவமான நபர்.
( சேர்கை பலன்கள் தொடர்ச்சி அடுத்த பதிவில் )

கிரக காரகதுவங்கள்
குரு ( ஆண் ஜாதகர் ) சுக்கிரன் ( பெண் ஜாதகர் அ ஜாதகி )
சூரியன் ( கௌரவம் ) புதன் ( விவேகம், அறிவு அ புத்திசாலித்தனம் )

பிருகு நாடி லக்னம்
காலபுருஷ ராசி மேஷம்
குரு அ சுக்கிரன் லக்னத்திற்கு சூரியன் 5 ஆம் பாவாதிபதி மற்றும் லக்னத்திற்கு 3 6 ஆம் பாவாதிபதிகளுடன் ( பாவ காரகதுவங்களுடன் ) சேர்கை பெறுகிறார்.

5 மற்றும் 3 6 ஆம் பாவ காரகதுவங்கள்
5 ஆம் பாவம் புத்திசாலிதனம் 3 ஆம் பாவம் தைரியம் 6 ஆம் பாவம் வெற்றி (புறவாழ்வு) அகவாழ்வில்? காரணம் 6 ஆம் பாவாதிபதி, உண்டு துல்லியபலன் ஆர்ஜி ராவ் நாடி முறையில் அறியலாம். பிருகு என்றாலும் ஆத்ம உயிர் காரகனுடன் சேர்கை பெறுவதால் நன்று அ குரு சுக்கிரன் கிரக காரகதுவங்கள்  தப்பித்துகொள்ளும். அஷ்தங்கதா தோஷம் பெறாதவரை.

கிரக சேர்கை கருத்து
குரு ( ஆண் ஜாதகர் ) சுக்கிரன் ( பெண் ஜாதகர் ) உடன் சூரியன் புதன் சேர்கை நன்றே. மேலும் விதியை இயக்கம் செய்யும் கிரகங்கள் சேர்கை. குரு புதன் பகை மற்றும் சுக்கிரன் சூரியன் பகை சேர்கை அகம் புறம் வகையில் பாக்கு படுத்தி ஆராயும் பொழுது சாதக பலன் தரும் சேர்கை ஆகும். விளக்கம் இதே கிரகங்கள் சேர்கை வகையில் சப்தரிஷி மற்றும் ஆர்ஜி ராவ் ஜோதிட பதிவுகளில் மேலும் பலன்கள் துள்ளியபடுதலில் காணலாம்.

கிரக சேர்கை யோகம் மற்றும் அவயோகம் ( தோஷம் )
சூரியன் புதன் சேர்கை புத ஆதித்ய யோகம் ஆகும். குரு அ சுக்கிரன் அஸ்தங்கதம் பெறுதல் அஷ்தங்கதா தோஷம் அவயோகம் ஆகும். முன் பதிவுகளில் பரிகாரம் விளக்கமாக உள்ளது. மேலும் புதன் சந்திரன் (nutral planets) மற்றும் ராகு கேது அஷ்தங்கதா தோஷம் ஆவதில்லை. சூரியன் சுக்கிரன் அஷ்தங்கதா தோஷம் ஒரு சில குறைபாடுகள் உண்டு. அதுவும் ஒரே நட்சத்திர பாதம் அவயோகம் மேலும் உண்டு. ( அடுத்த தொடர்ச்சி பதிவில் )

நாடி கிரக கோட்சார பெயர்ச்சிப் பலன்கள் 
கோட்சார பெயர்ச்சி கிரகங்களான சனி அ குரு இந்த ஜெனன கால பிறப்பு ஜாதகதில் இந்த சேர்கை பெரும் மேற்சொன்ன கிரகங்களை பார்க்கும் அ சேர்கை பெரும் காலம் மேற்சொன்ன பலன்கள் நடைபெறும். கோட்சார சனி சூரியனை பார்க்கும் பொழுது அகம் புறம் வாழ்கையில் ஒரு சில குறைபாடுகள் தென்படும் ( அடுத்த தொடர்ச்சி பதிவில் )

கோட்சார கிரகங்கள் பலன்கள் தரும் விதம் ( சேர்கை அ பார்வை )
கோட்சார பெயர்ச்சி கிரகங்களான சனி மற்றும் குரு தாங்கள் இருக்கும் கோட்சார சஞ்சார பாவங்களில் இருந்து 1 5 7 9 / 2 / 3 11 ( சேர்கை 3 பாகை அளவில் மட்டுமே நாடி பலன் கணிப்புக்கு எடுத்து கொள்ளப்பட்டும் ) ஜெனன கால ஜாதகத்தில் மேற்குறிப்பிட்ட பாவங்களில் இருக்கும் இந்த சேர்க்கையை பார்த்தல் அ சேர்கை கோட்சார சேர்கை பலன்கள் ஆகும்

நாடி ஜோதிட கிரக சேர்கை பரிகாரம் 
குரு அ சுக்கிரன் அஷ்தங்கத தோஷம் பெற்றால் " பிரதோஷ வழிபாடு " நலம் தரும். ( அடுத்த தொடர்ச்சி பதிவுகளில் )

ஷேர் செய்யவும், அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன்
சி,காளிதாஸ்.

பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். கமெண்ட்ஸ் செய்யவும் ஜோதிட சந்தேக கேள்விகளுக்கு பதில் தரப்படும்.





















0 comments:

Post a Comment