நாடி ஜோதிடம்: குரு சூரியன் சேர்கை பலன்கள் பதிவு 3

Monday, January 22, 2018

பிருகு நாடி ஜோதிடம்:
ஜோதிட வகுப்பு பாடங்கள் பதிவுகள் 3 

ஜோதிட வகுப்பு பதிவு 3 

தலைப்பு:
குரு + சூரியன் கிரக சேர்கை பலன்கள் 
சுக்கிரன் + சூரியன் கிரக சேர்கை பலன்கள் 

ஆய்வு காரகத்துவம் 
குணாதிசயங்கள் 

வேத ஜோதிடத்தில் குணாதிசயங்கள் 
பாரம்பரிய ஜோதிடம் அ பராசாரர் ஜோதிடம் என்றழைக்கப்படும் வேத ஜோதிடத்தில் ஜாதகர் அ ஜாதகியை 1 ( முதல் ) ஆம் பாவம் அதாவது லக்ன  பாவம் மட்றும் லக்னாதிபதியை கொண்டு அறியலாம். அதாவது ஜாதகர் அ ஜாதகியின் குணாதிசயங்கள், செயல்திறன், அனுபவிக்கும் யோகம், தனித்தன்மை ( individuality ), ஆரோக்கியம், சுயகௌரவம், தலைமை பண்பு ( லீடர்ஷிப் ), முளை, நோய் எதிர்ப்பு திறன் etc...   

நாடி ஜோதிடத்தில் குணாதிசயங்கள் 
பிருகு நாடி சப்தரிஷி நாடி மற்றும் ஆர்ஜி ராவ் நாடி ஜோதிடங்களில் குரு ஆண் ஜாதகரையும், சுக்கிரன் பெண் ஜாதகரையும் குறிக்கும். அதாவது வேத ஜோதிடத்தில் 1 ஆம் பாவமான முதல் பாவத்தின் காரகதுவங்களை அதாவது லக்ன பாவம் மற்றும் லக்னாதிபதியை கொண்டு காரகதுவங்களை அறிவது போல் நாடி ஜோதிடத்தில் குரு மற்றும் சுக்கிரன் கிரகங்களின் சேர்க்கையை  கொண்டு குணாதிசயங்கள், அனுபவிக்கும் யோகம் etc....போன்ற காரகதுவங்களை அறிதல் வேண்டும்.

குரு அ சுக்கிரன் + சூரியன் சேர்கைப் பலன்கள்
( குணாதிசயங்கள் வகையில் மட்டும் )
ஜாதகர் அ ஜாதகி சுயகௌரவம் நிறைந்த நபராக இருப்பார் அதாவது சுயமரியாதை சிந்தனை கொண்டவராக இருப்பார். இரக்ககுணம், பெருந்தன்மை, சமுதாய பொதுவுடைமை சிந்தனை, சிறப்பான இயல்பை பெற்ற நபராக இருப்பார்,

குரு அ சுக்கிரன் அமர்ந்த ராசியின் காரகதுவங்கள் பலன்கள்
கிரகங்களின் சேர்க்கை காரகதுவங்கலே முதன்மையான பலன்கள். நாடி ஜோதிடம் காலபுருஷ தத்துவமான மேஷதையே லக்னமாக கொண்டு இயங்குகிறது. குரு அ சுக்கிரன் அமர்ந்த ராசிகளின் காரகதுவங்களை பொருத்து இரண்டாம் தர பலனாக சிறிதேனும் ஜாதகர் அ ஜாதகி பின்வரும் குணாதிசயங்களை பெற்றிருப்பர்.

கண்டிப்பு, கோபம், அதிகாரம், கர்வம், பிடிவாதம், கலைகளில் ஆர்வம், எல்லோரையும் அனுசரித்து போகும் சுபாவம், பிறர் மீது ஆதிக்கம் செலுத்தும் குணம், தெய்வசிந்தனை, பொறுமை போன்ற குணங்களை சிறிதேனும் பெற்றிருப்பார்.

கிரக சேர்கை குடாது 
குரு அ சுக்கிரன் அமர்ந்த பாவத்திலிருந்து 1 5 7 9 / 2 / 3 11 ஆம் பாவங்களில் எந்த ஒரு கிரகமும் இருத்தல் குடாது. காரணம் எந்த ஒரு கிரகமும் தனித்து இயங்காது மேற்சொன்ன பாவங்களில் அ ராசிகளில் கிரகங்கள் இருந்தால் குரு அ சுக்கிரன் சூரியனுடன் மட்டும் சேர்கை இல்லாமல் பாவங்களில் இருக்கும் கிரகங்களுடனும் சேர்கைப் பெற்றிருபதாகவே கொள்ளவேண்டும்.

3 11 ஆம் பாவங்கள் முன்றாம் தர சேர்கை பலனாகும். ஆகவே குரு அ சுக்கிரன் அமர்ந்த பாகையில் இருந்து முன் பின் 3 பாகை ( degeree ) அளவில் மட்டுமே கிரகம் இருந்தால் மட்டுமே கிரக சேர்கையாக பலனுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

சந்தேகம் " இருப்பின் நாடியில் கிரக சேர்கை விதிகள் " முன்னோட்ட பதிவை காணவும்.

அஸ்தங்கதம் ( தோஷம் )
குரு அ சுக்கிரன் சூரியனுடன் 10 பாகைக்குள் சேர்கை பெறுதல் குடாது. சேர்கை பெற்றால் மேற்சொன்ன காரகதுவங்கள் அ குணாதிசயங்கள் வகையில் வலு குன்றும்.

பரிகாரம்:
குரு சூரியன் நட்பு கிரகங்கள் மேலும் விதியை இயக்கும் கிரகங்கள் சேர்கை ஆகும். ஆனால் சுக்கிரன் சூரியன் பகை ஆனால் விதியை இயக்கம் கிரகங்களே சுக்கிரன் சூரியன் இருவரும். குரு அ சுக்கிரன் அஸ்தங்கதம் பெற்றாலோ அ மேற்கொண்டு காரகதுவங்களை அபிவிருத்தி செய்ய நலம் தரும்.

 சூரியன் அதிதேவதையான " சிவன் " பிரதோஷ வழிபாடு நலம் குறிப்பாக சனி பிரதோஷம் நலம் தரும். சிவாலயங்கள் வழிபாடு செய்தல், சூரிய பகவான் கோவில், மாணிக்கம் மோதிரம் அணிதல், பாதிப்பு இருந்தால் மட்டும் ஓடும் நீரில் வெல்லத்தை போடுதல், ஆதித்ய இருதயம்,

சூரியனை வணங்குதல், கோதுமை பசுவுக்கு அ வறியவருக்கு தானம், ஞாயிறு விரதம், தந்தை போன்ற பெரியோரிடம் ஆசி பெறுதல், திருத்தாண்டகம் மட்றும் நமச்சிவாய பதிகம் மேலும் தேவைப்படுமாயின் நலம் தரும்.

ஜோதிட பதிவு 4 
பதிவின் நீளம் கருதி " குரு சூரியன் சேர்கை காலபுருஷ தத்துவ விளக்கம், காலபுருஷ அதிபதிகள் சேர்கை விளக்கம், நட்பு பகை மற்றும் விதியை இயக்கும் கிரக சேர்கை பலன்கள் etc.." காணலாம். 

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன்
சி,காளிதாஸ்.

பதிவுகளை பெற follow மட்றும் email முலம்  subscribtion செய்யவும்.
கமெண்ட்ஸ் செய்யவும் பதில் தரப்படும்.









































0 comments:

Post a Comment