பிருகு நாடி ஜோதிடம்: கிரக சேர்கை விதிகள்

Tuesday, December 26, 2017
                                                              
பிருகு நாடி ஜோதிடம்
( சேர்கை பெரும் கிரக காரகதுவங்கள் அடிபடையில் பலன் )

பிருகு நாடி ஜோதிட வகுப்பு: 
பதிவு 1


தலைப்பு:
நாடி ஜோதிடங்களில் கிரக சேர்கை விதிகள்.

பிருகு சப்தரிஷி நாடி ஜோதிடங்களும் ஆர்ஜி ராவ் ஜோதிடமும்:
பிருகு சப்தரிஷி நாடி ஜோதிட வகைகளுக்கு பொருந்தும் ஆர்ஜி ராவ் நாடி ஜோதிடம் பாகைகள் முறை சேர்கையில் பலன் கணிப்பு செய்யபடுவதால் சற்றே மாற்றம் பெரும்.

நாடி ஜோதிடத்தில் கிரக சேர்கை விதிகள்.
எந்த ஒரு குறிப்பிட்ட ஆய்வு கிரகமும் தான் அமர்ந்த பாவத்திலிருந்து 1 5 7 9 / 2 / 3 11 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களுடன் சேர்கை பெற்றே இயங்கும்.

நாடி ஜோதிடங்களில் கிரக சேர்கை பலன்களின் தரவரிசை.
1 முதல்தர சேர்கை பலன்: 1 5 7 9 ஆம் பாவ கிரகங்களுடன் பெரும் சேர்கை.
2 இரண்டாம் தர சேர்கை பலன்: 2 ஆம் பாவ  கிரகங்களுடன் பெரும் சேர்கை.
3 முன்றாம் தர சேர்கை பலன் 3 11 ஆம் பாவ கிரகங்களுடன் பெரும் சேர்கை.

முதல்தர வரிசை 1 5 7 9 கிரக சேர்கை விளக்கங்கள்:
( நேர்கோட்டு கிரக அ பாவ சேர்கை விளக்கங்கள் )

வேத ஜோதிடம் மற்றும் நாடி ஜோதிட ஒற்றுமை உண்மை திரிகோணம்:
நாடி ஜோதிடதில் முதல்தர கிரக சேர்கை விளக்கங்கள் அறிவதற்கு முன் திரிகோனபாவங்கள் படறிய ஒரு சிறு விளக்கம் அறிவது அவசியம். எந்த ஒரு பாவதுக்கும் அந்த பாவத்திலிருந்து வரும் 5 9 ஆம் பாவங்கள் திரிகோனபாவங்கள் ஆகும். ஒரு குறிப்பிட்ட ( ஆய்வு ) கிரகம் அ ஒரு குறிப்பிட்ட பாவம் வலிமை குன்றிருந்தாலும் அதன் திரிகோணம் அதிபதி  கிரகங்கள் அ திரிகோண பாவங்கள் வலுவாக இருப்பின் அந்த குறிப்பிட்ட ( ஆய்வு ) கிரகம் அ அந்த குறிப்பிட்ட பாவம் ஏதோ ஓடும் அ தப்பித்து கொள்ளும். காரணம் ஒரு குறிப்பிட்ட பாவம் அ குறிப்பிட்ட கிரகம் இயங்கும் பொழுது அதன் திரிகோணம் கிரகங்கள் மற்றும் திரிகோணம் பாவங்களும் இயங்கும்  (இயங்குகிறது) என்பது பாரம்பரியம் அ வேதஜோதிடம் பிருகு நாடி ஜோதிடம் சப்தரிஷி  நாடி ஜோதிடம் ஆர்ஜி ராவ் நாடி ஜோதிடம் மற்றும் கேபி ஜோதிட விதிகளாகும்.

எந்த ஒரு பாவமும் எந்த ஒரு கிரகமும் தனித்து இயக்குவது இல்லை
12 பாவங்களின் திரிகோண பாவங்கள்.
1 ஆம் பாவம் வீக் என்றால் 5 9 வலிமை என்றால் 1 ஓடும் அ தப்பிக்கும்.
2 ஆம் பாவம் வீக் என்றால் 6 10 வலிமை என்றால் 2 ஓடும் அ தப்பிக்கும்.
3 ஆம் பாவம் வீக் என்றால் 7 11 வலிமை என்றால் 3 ஓடும் அ தப்பிக்கும்
4 ஆம் பாவம் வீக் என்றால் 8 12 வலிமை என்றால் 4 ஓடும் அ தப்பிக்கும்.



உதாரனம்:
ஜோதிட திசைகள் அமைப்பு முலம் மொத்தம் 4 திசைகள்.
கிழக்கு: மேஷம் சிம்மம் தனுஷு 1 5 9
தெற்கு: ரிஷிபம் கன்னி மகரம் 1 5 9
மேற்க்கு: மிதுனம் துலாம் கும்பம் 1 5 9
வடக்கு: கடகம் விருசிகம் மீனம் 1 5 9


     









மேலும் கிரகங்களின் நட்சத்திர அமைப்பு முலம் ஓர் உதாரனம்:
9 கிரகங்கள் 27 நட்சத்திரங்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் 3 நட்சதிரங்கள் விதம் 9 கிரகத்திற்கும் 3 = 3 நட்சத்திரங்கள் விதம் 27 நட்சத்திர குட்டம் அடங்கியதாக ராசி மண்டலம் அமைகப்பட்டுள்ளது. உதாரனம் கேது நட்சத்திரங்கள் அஷ்வினி மகம் முலம் முறையே மேஷம் சிம்மம் தனுஷு என்று திரிகோணமாக அதன் திரிகோண திசை  பாவங்களில் அமைகப்பட்டுள்ளது. மேலும் உதாரனம் கேது நட்சத்திரங்கள் போலவே 9 கிரகங்களின் ஒவ்வொரு நட்சத்திரமும் அதன் திரிகோண  பாவங்களில் அமைந்திருக்கும். பாரம்பரியம் அடிப்படை ஜோதிட வகுப்பு பதிவுகளில் விளக்கப்படும்.
அஷ்வினி ( மேஷம் ) மகம் ( சிம்மம் ) முலம் ( தனுஷு ) 1 5 9
அஷ்வினி  மேஷம் ( ஆய்வு ) 1 ஆம் பாவமென்றால்......

குறிப்பு:
ஒரு திசாபுத்தி அ ஒரு பாவம் இயங்கும் பொழுது அதன் திரிகோண பாவங்களும் திரிகோண திசாக்களும் ( திசைகள் ) இயங்கும். எந்த ஒரு பாவமோ அ திசாவோ தனித்து இயங்காது ( இயக்கம் ஒன்றே ). அதன் திரிகொனங்களும் இயங்கும். அதற்க்குத்தான் முன்னோர்கள் அமைத்தனர் ஒரே திசை ராசிகளும் ஒரே திசையில் அமைந்த நட்சத்திரஙகளையும். மேலும் பிறப்பு சந்திரன் ( ஜென்ம நட்சத்திரம் ) அஷ்வினியோ மகமோ அல்லது மூலமோ. கடந்த காலங்களில் கேது திசா இருப்பு என எழுதாமல் பெரியோர்கள் அஷ்வினி மகம் முலம் கொண்ட கேது திசா ( திசை ) இருப்பு என எழுதினர் ஆனால் இன்று வழக்கில் இல்லை.

திரிகோண பாவதிபதிகள் கிரகசேர்கை + பாவ காரகத்துவ சேர்கை
ஆக பாரம்பரியம் நாடி மற்றும் கேபி ஜோதிட விதிகளின் படி ஒரு கிரக திசா அ புத்தி காலங்கள் அதன் திரிகோண பாவதிபதிகளுடனும் திரிகோண பாவ காரகதுவங்களுடனும் ( 5 9 இல் இருக்கும் கிரகங்களுடன் ) இணைந்தே செயல்படும். ஆனால் பலன் கணிக்க ஒரு கிரகம் அமர்ந்திருக்கும் 1 ஆம் பாவ காரகதுவங்களும் கிரக காரகதுவங்களும் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. விளைவு அங்கு ஜோதிட கணிப்பு பலன் ௦% அ மாறுபட்ட பலன்.

முதல் தர சேர்கை 7 விளக்கங்கள்:
ராசி மண்டலம் ( பூமியில் இங்கிலாந்து க்ரின்விட்ச்லிருந்து ௦ ஆரம்பித்து முடிவு 360 பாகை ) 360 பாகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிரகம் அமர்ந்த ராசி ௦ பாகை ஆரம்பம் என கொண்டால், அதன் 12 ஆம் பாவம் முடிவு 360 பாகை என கொள்ளுதல் வேண்டும். எந்த ஒரு கிரகமும் ( ராகு கேது தவிர ) நேர் கோட்டு பார்வையையாக 180 பாகை அதாவது எதிர் திசையை நேர்கோட்டு பார்வையாக முழுமையாக பார்வையிடும். இங்கு பார்வை சேர்கை என கொள்ளுதல் வேண்டும்.

காலபுருஷ தத்துவ விளக்கம் 7 இன் சேர்க்கைக்கு.
உதாரணம்: மேஷம் மற்றும் ரிஷிபம்.
மேஷம் ( 1 ) நெருப்பு என்றால் நெருப்பு நன்றாக ஏறிய துலாம் ( 7 ) காற்றின் அவசியம் முக்கியம். ரிஷிபம் ( 1 ) நிலம் என்றால் நிலம் பண்படுத்த விருசிகம் ( 7 ) நீர் அவசியம் அ முக்கியம்.

நேர்கோட்டு சேர்கை 1 5 7 9 ஆம் பாவ கிரக சேர்க்கைகள்:
ஒரு கிரகம் தான் அமர்ந்த பாவத்திலிருந்து 1 5 7 9 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களுடன் நேர்கோட்டியில் சேர்கை பெறுகிறது இது நாடி ஜோதிடத்தில் பலன் கணிக்க பயன்படும் முதல்தர வரிசை கிரக சேர்கை பலனாகும்.

இரண்டாம் ( 2 ) தர வரிசை கிரக சேர்கை விளக்கங்கள்:
அதாவது ( semi sextile ) அரை பங்கு சேர்கை என பொருள். மேஷத்திற்கு ( நெருப்பிறகு ) துலாம் ( காற்று ) 100% ஆக எதிர்திசை சேர்கையென்றால், மேஷத்திற்கு ரிஷிபம் ( நிலம் ) 50% ஆக எதிர்திசை சேர்க்கையை கிரக சேர்கை கணக்கில் கொள்ளுதல் வேண்டும்.

குறிப்பு:
ஒரு குறிப்பிட்ட கிரகம் முதல்தர சேர்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களுடன் சேர்கை பெரும் பொழுதோ அ பெற்றிருந்தாலோ, கிரக சேர்கை பலனுக்கு இரண்டாம் தர சேர்க்கையை அதாவது கிரக காரகதுவதை சேர்கை பெரும் முதல் தர கிரகங்களின் காரகதுவ பலனுக்கு ஒத்துவந்தால் உருகாய் போல் எடுத்துக்கலாம் அல்லது தவிர்க்கலாம்.
ஆனால் முதல் தர கிரக சேர்கை ஒரே ஒரு கிரகத்துடன் இருந்தாலோ அ முதல் தர வரிசையில் கிரக சேர்க்கையே இல்லையென்றாலோ பலன் குற இரண்டாம் தர கிரக சேர்கை மிக முக்கியம். காரணம் ஒரு தேரை இயக்கும் சாரதி போன்றது இரண்டாம் தர கிரக சேர்கை பலன். ஒரு தேர் இயங்க சாரதி மிக முக்கியம். ஆனால் சாரதிகென்று ஒரு தகுதி உள்ளது. தேவையேன்றலோ அ சாரதியின் உதவி தேவைபட்டால் மட்டுமே இரண்டாம் தர கிரக சேர்கையை கணக்கில் கொள்ளுதல் வேண்டும்.


          










முன்றாம் ( 3 11 ) தர கிரக சேர்கை விளக்கங்கள்.
முன்றாம் தர கிரக சேர்க்கைக்கு முக்கியத்துவமே தர வேண்டாம். ஒருவேளை முதல் தர கிரக செர்கையிலோ அ இரண்டாம் தர கிரக சேர்கையிலோ கிரகங்கள் இல்லையென்றால் மட்டுமே முன்றாம் தர சேர்க்கையை கிரக சேர்கை பலனுக்கு கணக்கில் கொள்ள வேண்டும். காரணம் முழு நேர்கோட்டு ( 100% ) சேர்கையும் இல்லை. அரை நேர்கோட்டு ( 50% ) சேர்கையும் இல்லை. மேஷம் கிழக்குயென்றால் மிதுனம் ( 3 ) கும்பம் ( 11 ) இரண்டுமே மேற்கு திசையை குறிக்கும்.

முன்றாம் தர கிரக சேர்க்கையை கணக்கில் கொள்ளும் விதம்:
குறிப்பு:
முதல் தர கிரக சேர்கை வரிசையிலும் இரண்டாம் தர கிரக சேர்கை வரிசையிலும் கிரகங்கள் சேர்கை ஆய்வு கிரகத்திற்கு இல்லையென்றால் மட்டுமே பலன் கணிக்க கணக்கில் முன்றாம் தர வரிசையை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். இருந்தால் முதல் மற்றும் இரண்டாம் தர வரிசை கிரக காரகத்துவ சேர்கைக்கு முன்றாம் தர வரிசை கிரகங்கள் காரகதுவங்கள் ஒத்து வந்தால் மேலும் உருகாய் போல் பயன்படுதலாம் அ தவிர்க்கலாம்.
மேஷத்தில் ஒரு ஆய்வு கிரகம் அமர்வு 5 பாகையில் இருந்தால், மிதுனம் (3) மற்றும் கும்பத்தில் (11) இருக்கும் முன்றாம் தர வரிசை கிரகம் 2 பாகையில் இருந்து 5 பாகைக்குள் இருத்தல் வேண்டும் அ 5 பாகையில் இருந்து 8 பாகைக்குள் இறுத்தல் வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே முன்றாம் தர வரிசை கிரக சேர்கையை நாடி ஜோதிட பலன் கணிக்க கணக்கில் எடுத்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு 3 பாகை வித்தியாச சேர்கை தவறினால் முன்றாம் தர கிரக சேர்கை நாடி ஜோதிட பலன் கணிக்க கணக்கில் இல்லை.

குறிப்பு: 
மேற்கொண்டு கணித்தால் நடைமுறைக்கு ஒத்துவராத அ முழுமையாக பலன் தராத ஜோதிட பலன் விளைவுகளே நிகழும். நாடி ஜோதிட வகுப்பின் பதிவுகளான பிருகு சப்தரிஷி நாடிகளின் பரிணாமம் ஆர்ஜி ராவ் நாடி ( பாகைகள் அடிபடை ) ஜோதிடம் பயிலும் பொழுது முழுமையான விளக்கம் பெறலாம். அடிப்படை பிருகு ஆர்ஜி ராவ் நாடி பாகைகள் அடிப்படை சேர்க்கையை பிருகுவில் முன்றாம் தர சேர்க்கையில் பில்ட்டர் செய்து தந்துள்ளேன், பயனாளிகள் பிருகு நாடி ஆரம்ப ஜோதிட பதிவுகளில் இருந்தே follow செய்து செய்து கொள்ளவும்.

அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல். மேற்கொண்டு சந்தேகம் இருப்பின் ஜோதிட வகுப்பு முனோட்ட பதிவுகளை காணவும்.

இலவசம்! இலவசம்! இலவசம்!

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன்
சி,காளிதாஸ்.

பிருகு நாடி ஜோதிடம் முதல் கேபி ஜோதிடம் வரை ஜோதிட பதிவுகள் மேலும் வகுப்பு பதிவுகள் மட்றும் துல்லிய ஜோதிட பலன் அறிய: பார்வையிடவும்:
https://kalijothidam.blogspot.in/
https://kalipaarampariyamjothidam.blogspot.in/
https://kalibirugunaadijothidam.blogspot.in/
https://kalisaptharisinaadijothidam.blogspot.in/
https://kalirgraonaadijothidam.blogspot.in/
https://kalikpjothidam.blogspot.in/
https://kalikpadvance.blogspot.in/
https://kalikpbhavangal.blogspot.in/
https://kalikpprasanam.blogspot.in/
https://kaliparikaram.blogspot.in/
https://kalikiragaparikarangal.blogspot.in/
https://kalijothidavideoes.blogspot.in/
https://kalicontact.blogspot.in/

ஜோதிட பதிவுகள் தொடர்ந்து தம்மை அடைய 
1 தமது மெயில் ஐடியை இணைத்து blogger இல் supscripe செய்து கொள்ளவும்.
2 follow option ப்ரெஸ் செய்து இணைந்து கொள்ளவும்.

NOTE:
please subscribe my " blogger " with signup your " email " and follow option.
Thank you.





Image may contain: text



2 comments:

Post a Comment