பிருகு நாடி ஜோதிடம்: குரு அ சுக்கிரன் = செவ்வாய் கிரகச் சேர்க்கைப் பலன்கள் 6

Thursday, February 1, 2018

பிருகு நாடி ஜோதிட வகுப்பு பாடங்கள் பதிவுகள் 6 

தலைப்பு 
குரு + செவ்வாய்  கிரகச் சேர்கைப்  பலன்கள்

சுக்கிரன் + செவ்வாய் கிரகச் சேர்கைப் பலன்கள்

ஆய்வு காரகத்துவம் 
ஜாதகர் குணாதிசயங்கள்

நாடி ஜோதிடத்தில் குணாதிசயம் ஆய்வு காரக கிரகம் 
குரு ( ஆண் ஜாதகர் ) ஐ குறிக்கும் காரக கிரகம் ஆகும்
சுக்கிரன் ( பெண் ஜாதகர் ) ஐ குறிக்கும் காரக கிரகம் ஆகும்

நாடி ஜோதிடத்தில் குணாதிசயங்களை அறியும் முறை
ஜாதகர் அ ஜாதகியின் குணாதிசயங்களை குரு மற்றும் சுக்கிரனுடன் 1579/2/311 ஆம் பாவங்களில் சேர்கைப் பெரும் கிரகங்களின் காரகத்துவக் குணாதிசயங்களைக் கொண்டு அறிதல் வேண்டும். அதாவது சேர்க்கைப் பெரும் கிரகங்களின் கிரகக் காரகங்களைக் கொண்டு நாடி ஜோதிடத்தில் குணாதிசயங்கள் கணிக்கப்படுகின்றன.

செவ்வாய் கிரக காரகதுவங்கள்
செவ்வாய் கிரகம்  மனித குணாதிசயங்கள் வகையில்

ஜாதகத்தில் செவ்வாய் வலுபெற்றால் 
தினவெடுத்த கைகளும், தசைகளும் ( தோல்கள் ) மற்றும் கட்டுமஸ்தான உடல்களுமே வீரம், தைரியம், விடாமுயற்சி, உறுதிப்பாடு, தன்னம்பிக்கை போன்ற மனித குணாதிசயங்களுக்கு காரணம். செவ்வாய் கிரகம் மேற்கூரிய மனித குணாதிசயங்களுக்கு காரக கிரகம் ஆகிறார். 

தினவெடுத்த கைகளும், தசைகளும் ( தோல்கள் ) மற்றும் கட்டுமஸ்தான உடல்களுமே வீர சாகசங்கள் ( மஞ்சு விரட்டு அ காளையை அடக்குதல் ) போன்றவற்றிற்கும் குத்துசண்டை, கராத்தே போன்ற விளையாட்டுகளுக்கும் காரணம். செவ்வாய் வீரசாகசங்கள் மற்றும் விளையாட்டு என்ற மனித குணங்களுக்கு காரக கிரகம் ஆகும்.

ஜாதகத்தில் செவ்வாய் வலு இழந்தால் 
தினவெடுத்த கைகளும், தசைகளும் ( தோல்கள் ) மற்றும் கட்டுமஸ்தான உடல்களும், துடிப்பான ரத்தங்களுமே அடக்கி ஆளும் குணாதிசயங்களுக்கும், முன்கோபம், பிடிவாதம், முரட்டுத்தனம், யாருக்கும் கட்டுபடாத குணம், புரட்சி செய்யும் எண்ணம், மற்றவர் துன்பப்படுதலை ரசிக்கும் குணம், மற்றவருக்கு வேதனை உண்டாக்கும் குணம், பழி வாங்கும் எண்ணம் போன்ற மனித குணங்களுக்கும் செவ்வாய் கிரகமே காரக கிரகம் ஆகும்.

செவ்வாய் காலி நிலம் விவசாயநிலம், சுக்கிரன் வீடு காரக கிரகங்கள்  
சனி எஸ்டேட், புதன் பிளாட் ஐ குறிக்கும் காரக கிரகங்கள் 
செவ்வாய் கிரகம் சகோதர காரகன் என்றும், பூமிக்காரகன் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. காரணம் பூமி மற்றும் செவ்வாய் கிரகம் தவிர்த்து மற்ற கிரகங்களில் அ கோள்களில் உயிரினங்கள் எவையும் வாழ்வதற்கு உண்டான சூழ்நிலை இல்லை என்பதாலும், மேலும் பூமியில் இருந்து பிரிந்த கிரகம் செவ்வாய் என்ற ஒரு கருத்துமே காரணம். ஆகவே அசையா சொத்து மற்றும் காலி விவசாய நிலத்திற்கும் காரகர் செவ்வாய் ஆகும். ஆகவே பூமி மற்றும் நிலம் சம்பந்தமாக ஆசைப்படும் மனித குணங்களுக்கும், அசையா சொத்துக்கள் சம்பந்தமாக முன்யோசனை இல்லாத மனித குணங்களுக்கும் செவ்வாய் கிரகமே காரக கிரகம் ஆகிறார்.

குரு அ சுக்கிரன் + செவ்வாய் கிரகச் சேர்கைப் பலன்கள்
பாரம்பரியம் + நாடி ஜோதிடப் பலன்கள்

ஜெனன காலப் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருப்பின்
ஜாதகர் தைரியம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, வீரம், உறுதிபாடு போன்ற குணங்களை கொண்டிருப்பார். விளையாட்டு மற்றும் போட்டி போட்டு வெற்றி பெறுதல் ( அகவாழ்விலும் புரவால்விலும் ) போன்ற சிறப்பான நல்ல குணங்களை ஜாதகர் கொண்டிருப்பார்.

ஜெனன காலப் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் வலு குன்றினால்
அடக்குமுறை, பிடிவாதம், முன்கோபம், முரட்டுத்தனம், அடுத்தவரை வேதனைக்கு உள்ளாக்குதல், மற்றவருக்கு கட்டுபடாத தன்மை, சண்டை சச்சரவு செய்தல், முன்யோசனை தவறுதல் போன்ற குணங்களை ஜாதகர் கொண்டிருப்பார்.

ஜாதகத்தில் செவ்வாய் வலு மற்றும் வலு குன்றுதல் ஆய்வு முறை 
8 12 ஆம் பாவங்களில் ( மறைவு ஸ்தானங்கள் ) இல்லாதிருத்தல், 8 12 ஆம் பாவாதிபதிகள் சாரம் பெறாமல் இருத்தல், கேந்திரத்தில் அமர்ந்திருத்தல் நல்ல சிறப்பு, திரிகோணத்தில் அமர்ந்திருத்தல், நட்பு ஆட்சி மூலத்திரிகோணம் பெறுதல், பகை வீடுகளில் இல்லாதிருத்தல், பாதகாதிபதி சாரம் பெறாது இருத்தல், மாரகாதிபதி சாரம் பெறாது இருத்தல், சுபஷ்தானங்களில் இருந்து நவாம்சத்தில் வர்கோத்தமம் பெறுதல், லக்ன சுபராக இருத்தலையும் சாதகமாக ஒரு பலன் கணிப்பில் வைத்து கொள்ளலாம், லக்னசுபர் திரிகோணம் போன்ற சுபவீடுகளின் (ஆதிபத்யங்கள்) அதிபதிகளின் சாரம் பெறுதல் etc.....

பதிவு 7
பதிவின் நீளம் கருதி " கோட்சார பெயர்ச்சிப் பலன்கள், கிரகப் பரிகார முறை, காலபுருஷ தத்துவ விளக்கம், கிரகச் சேர்கை கருத்து, சேர்கை யோகம் மற்றும் அவயோகம் " etc.... போன்ற பலன்களை அறியலாம்.

பாரம்பரியம் + நாடி + கேபி ஜோதிட நிபுனன்
சி,காளிதாஸ்.

பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். கமெண்ட்ஸ் செய்யவும் ஜோதிட பதிவுகள் மற்றும் பாடங்கள் பதிவுகள் சம்பந்தமான ஜோதிட சந்தேகங்களுக்கு பதில் தரப்படும்.



பிருகு நாடி ஜோதிடம் முதல் கேபி ஜோதிடம் வரை ஜோதிட பதிவுகள் மேலும் வகுப்பு பதிவுகள் மட்றும் துல்லிய ஜோதிட பலன் அறிய: பார்வையிடவும்:


ஜோதிட பதிவுகள் தொடர்ந்து தம்மை அடைய 
1 தமது மெயில் ஐடியை இணைத்து blogger இல் supscripe செய்து கொள்ளவும்.
2 follow option ப்ரெஸ் செய்து இணைந்து கொள்ளவும்.

NOTE:
please subscribe my " blogger " with signup your " email " and follow option.
Thank you.

Image may contain: text

















0 comments:

Post a Comment