பிருகு நாடி ஜோதிடம்: குரு அ சுக்கிரன் + சூரியன் சேர்கை பலன்கள் பதிவு 4

Tuesday, January 23, 2018



பிருகு நாடி ஜோதிடம்.
ஜோதிட வகுப்பு பாடங்கள் பதிவுகள் 4

தலைப்பு:
குரு + சூரியன் கிரகச் சேர்கை பலன்கள் 
சுக்கிரன் + சூரியன் சேர்கை பலன்கள்.

ஆய்வு காரகத்துவம் 
குணாதிசயங்கள்.

பதிவு 3 இன் தொடர்ச்சி 

நாடி ஜோதிட லக்னம் 
பாரம்பரியம் ஜோதிடம் அ பராசாரர் ஜோதிடம் என்றளைகப்படும் வேத ஜோதிடத்தில் ஜெனன கால நேரத்தை அடிப்படையாக கொண்டு லக்னம் கணிக்கபடுகிறது. நாடி ஜோதிடத்திலும் லக்னம் உண்டு. நாடி ஜோதிடத்தில்  காலபுருஷ தத்துவ ராசியான மேஷத்தையே லக்னமாக அதாவது முதலாம் பாவமாக அ வீடாக கொண்டு நாடி ஜோதிட பலன்கள் கணிக்கப்படுகின்றன.

காலபுருஷ தத்துவ விளக்கம் 
பதிவு 3 யில் குரு அ சுக்கிரன் + சூரியன் சேர்கை பலனுக்கு காலபுருஷ தத்துவ விளக்கம் யாதெனின், சுயகௌரவம் அதாவது சுயமரியாதை சிந்தனை, இரக்ககுணம் போன்ற கிரக காரகதுவங்கள் சூரியன் கொண்டிருப்பது ஒரு காரணம் ( சூரியன் கிரக காரகதுவங்கள் )

குரு ( ஆண் ஜாதகர் )  சுக்கிரன் ( பெண் ஜாதகர் ) சேர்கை காலபுருஷ லக்னமான மேஷத்துக்கு 5 ஆம் அதிபதியான சூரியனுடன். 5 ஆம் பாவ காரகத்துவங்களில் கௌரவம் மட்றும் இரக்ககுணம் உண்டு. காரணம் 5 ஆம் பாவம் இயற்கை பாவமாகும் அதன் அடிப்படையில் ஜாதகர் செண்டிமெண்ட் குணங்களை கொண்ட நபராக இருப்பார். மேலும் சமுதாய பொதுவுடைமை சிந்தனை மற்றும் சிறப்பான இயல்புகளை கொண்ட நபராக இருப்பார் என்பதும் சூரியன் கிரக காரகத்துவங்களில் ஒன்றாகும்.

கிரக சேர்கை கருத்து 

குரு + சூரியன் 

குரு சூரியன் நட்பு கிரகங்கள் ஆகும் மேலும் விதியை இயக்கும் கிரகங்களின் சேர்கை ஆகும் குணாதிசயங்கள் வகையில் நன்றே. 

சுக்கிரன் + சூரியன் 
சுக்கிரன் சூரியன் பகை கிரகங்கள் ஆகும். பொதுவாக பகை நட்பு என கிரகங்களை பிரிப்பதை விட அகம் புறம் என பிரித்தல் இரு கிரகங்களின் சேர்கை நன்றே அகம் ( கௌரவம் ) புறம் ( அரசுத்துறை ஆதரவு மற்றும் கௌரவமான புறவாழ்க்கை ) உண்டு. இன்றைய நடைமுறை வாழ்கையில் இந்த சேர்கை அவசியம் தேவை. நற்பலன்களை நடைமுறையில் கிடைகிறது.  ஆனாலும் பகை குணங்களை கொண்ட இரு கிரக சேர்கை ஆகும். அகம் புறம் வகையில் கர்வம் ,ஆதிக்க குணம் போன்றவை தென்படலாம். மேலும் விதியை இயக்கும் இரு கிரகங்களின் சேர்கை ஆகும். சுக்கிரன் அமர்ந்த பாவம் அ ராசி அ வீட்டின் காரகதுவங்களை கணக்கில் கொண்டு மேலும் பலன்கள் கணிக்கலாம்.

கிரகங்களின் அகம் புறம் காரகத்துவப் பலன்கள் 
கிரகங்களின் அகம் புறம் காரகத்துவப் பலன்கள் ஆர்ஜி ராவ் நாடி ஜோதிட வகுப்பு பதிவுகளில் விரிவாக காணலாம். பிருகு நாடி ஜோதிடத்தில் நட்பு பகை என்ற வகையிலேயே கிரக காரகத்துவ பலன்களை அறியலாம்.

கிரகங்களின் அகம் புறம் காரகத்துவப் பலன்கள்
சூரியன் ( அரசுத்துறை ) + ராகு ( லஞ்சம், தவறான வழி ) 

சூரியன் + ராகு எதிர் எதிர் குணங்களை கொண்ட பகை கிரகங்கள் ஆகும். சூரியனுக்கு ராகு பகை கிரகம் ஆகும். அரசுத்துறை என ஆராயும் பொழுது பெரிய அளவில் அரசுத்துறை லாபம் உண்டு ( புறவாழ்க்கை )  ஆனால் லஞ்சம் போன்ற தவறான வழியில் அகவாழ்வை கெடுப்பார்.

காரணம் ராகு புறம் தந்து அகம் அடிப்பவர். மேலும் கிரகங்களில் பலவான்கள் ராகு மற்றும் கேது ஆகும். மேலும் விதியை முடக்கும் கிரகங்கள் ஆகும்.

ஒரே வழி விதி வழியே ராகு காரகதுவங்கள் படி வாழ்வை அமைத்து கொள்ளுதல் நலம். திசா புத்தி மற்றும் நாடி கோட்சார பலன்களை அறிந்து அந்தந்த கால கட்டத்தில் விதி மதி அறிந்து வாழ்கையை கவனமாக அமைத்து கொள்ளுதல் நலம் தரும்.

குறிப்பு:
சூரியன் அமர்ந்த பாவத்திலிருந்து 1 5 9 / 2 / 3 11 ( சேர்கை கணக்கு 3 பாகை மட்டும் ) ஆம் பாவங்களில் கிரகங்கள் இருத்தல் குடாது. காரணம் நாடி விதிகள் படி எந்த கிரகமும் தனித்து இயங்காது. அவ்வாறு இருந்தால் கிரக சேர்க்கையாகும். சூரியன் ராகு கிரகச் சேர்கை மட்டும் அல்லாது பிற கிரக சேர்கை பெற்றுள்ளதாக பலனுக்கு கணக்கில் கொள்ள வேண்டும்.

ஷேர் செய்யவும் அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்.

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன் 
சி, காளிதாஸ்.

பதிவுகளை பெற follow அ மெயில் முறையில் subscribtion செய்யவும்.
கமெண்ட்ஸ் செய்யவும் பதில் தரப்படும்.


           









0 comments:

Post a Comment