2 சூரியனின் காரகத்துவம் / leadership நிர்வாகம் ஆளுமை / அரசாங்கம் அதிகாரம்

Thursday, March 15, 2018
சென்ற பதிவின் தொடர்ச்சி

leadership ( தலைமை தாங்கும் பண்பு ) மற்றும் நிர்வாக திறமை / ஆளுமை திறன் மற்றும் தனித்தன்மை ( individuality ) 
சூரியன் தலைமை leadership நிர்வாகம் செய்தலுக்கு காரக கிரகம் ஆகிறார். காரணம் முன் பதிவு தொடர்ச்சியை காணவும். அரசியல்வாதிகள் மேலதிகாரிகள் ( மேனேஜர் ) தந்தை போன்றவை சூரியன் காரகதுவங்கள் ஆகவே சூரியன் ஜாதகத்தில் வலு பெற்று குறிப்பிட்ட காரக கிரகங்களுடனும் கிரகங்கள் குறிக்கும் பாவங்களுடனும் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் நிர்வாக திறமை ஆளுமை திறன் எதையும் பேஸ் செய்யும் தனித்தன்மை போன்ற குணாதிசயங்களை கொண்ட நபராக விளங்குவார்.

அரசியல்வாதிகள் காரக கிரகம் சூரியன் ஆகும். ஒருவர் அரசியலில் ஜொலிக்க சூரியன் மற்றும் பத்தாம் பாவம் மற்றும் முன்றாம் பாவமும் வலுபெற வேண்டும். மேலும் செவ்வாய் ராகு வலுபெருவதும் சூரியன் சம்பந்தம் கொள்வதும் சிறப்பைத்தரும்.

அரசாங்கம் அதிகாரம் 
நம்மை வழிநடத்தும் தலைவர்களையும் மேலதிகாரிகளையும் தந்தை போன்றோரையும் சூரியன் குறிப்பதாலும் மேலும் govt job அரசுத்துறை போன்ற விசயங்களுக்கும் சூரியன் காரகராக விளங்குகிறார்.

வலதுகண் காரக கிரகம் சூரியன் 
உடல் அவயங்களில் வலது கண்ணுக்கு சூரியன் காரக கிரகமாக விளங்குகிறார். எவ்வாறு என்பதை அடுத்த தொடர்ச்சி பதிவுகளில் காணலாம்.

குறிப்பு 
சூரியன் உடல் அவயங்களில் வலது கண்ணுக்கும் சந்திரன் இடது கண்ணுக்கும் காரகமான கிரகங்கள் ஆகும்.



0 comments:

Post a Comment